News November 8, 2024
நாகை அருகே தாய் கொலை: மகன் கைது
திருக்குவளை ஏரித்திடல் பகுதியைச் சேர்ந்த நாகூரான் மனைவி மணியம்மாள் (65). இவர்களது மகன் சுரேஷ் (33). இவர், மது குடிக்க பணம் கேட்டு தந்தை நாகூரானிடன் அண்மையில் தகராறு செய்துள்ளார். இதை மணியம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த சுரேஷ், மணியம்மாளை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2024
டைடல் பார்க் அமையும்இடத்தை மாற்ற கோரிக்கை
நாகை அருகே செல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் மாவட்ட வளர்ச்சி குழுமத்தினர் விளை நிலங்களில் டைடல் பார்க் அமைவதை கைவிட்டு நகரின் மத்தியில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே அமைக்க வலியுறுத்தி நேற்று மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
News November 19, 2024
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 19, 2024
நோபல் சாதனை படைத்த 4 மாத குழந்தை
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.