News December 17, 2025
நாகை: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

வேதாரண்யம் நாலுவேதபதியை சேர்ந்தவர் மனோஜ் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (17) ஆகியோர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல வாஞ்சூர் ரவுண்டானா அருகே அரசு பஸ் ஒன்று மனோஜ் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ் படுகாயமடைந்தார். இதையடுத்து நாகூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் சண்முகம் (57) என்பரை கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
நாகை: தொழில் தொடங்க மானியம்

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP) மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள், சுயதொழில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.