News October 31, 2025

நாகை அரசு அலுவலகத்தில் பரபரப்பு

image

நாகை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டு கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஏற்கனவே சேதமடைந்த நிலையில் காட்சியளித்த இக்ககட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் நேற்று திடீரென பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தன. அப்போது மதிய உணவு இடைவேளை என்பதால் பணியாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 31, 2025

நாகூர் கந்தூரி விழா ஏற்பாடு தீவிரம்

image

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி தர்காவில் உள்ள 5 மினராக்கள் அலங்கார வாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரங்களால் சாரம் அமைத்து வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

News October 31, 2025

நாகை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

நாகை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in<<>> என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

நாகை: மாணவியிடம் அத்துமீறிய போலீஸ் கைது

image

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரைச் சேர்ந்த காவலர் குணா (37), 12-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!