News October 20, 2025
நாகை: அமெரிக்காவுக்கு மீண்டும் அஞ்சல் சேவை

இந்திய அஞ்சல்துறை அமெரிக்காவிற்கு, இந்தியாவில் இருந்து அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவை கடந்த 15ந்தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு, நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
நாகை: தீபாவளி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், எங்கும் ஒளி பரவட்டும், இருள் ஒழியட்டும், இன்பம் நிலைக்கட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
நாகை: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

நாகை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
நாகை: ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை

நாகை ரயில்நிலையத்தில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் பேசும்போது, ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடைசெய்யப்பட்டு உள்ளது. எனவே பட்டாசு கொண்டு செல்வோர் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.