News March 22, 2024
நாகை அதிமுக வேட்பாளர் இவர் தான்

நாகை மக்களவைத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக சுர்ஜித் சங்கரை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர். இவர் எம்எஸ்டபிள்யூ, பிஎச்.டி படித்துள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தனர். தற்போது நாகை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
திருக்குவளை பால முனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா

நாகை மாவட்டம் திருக்குவளையில் பால முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இகோயிலில் ஆடி பெருந்திருவிழா நேற்று இரவு (ஆக.12) நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்று, அன்னதான விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகைச்சுவை பட்டி மன்றம் நடைப்பெற்றதில்,
ஏராளமான பக்தர்கள், மருளாலிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
நாகை விவசாயிகளுக்கு ரூ.6,000; ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டத்தின் கீழ், தொடர்ந்து தவணை தொகை ரூ.6,000 பெற, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். இதுவரை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
News August 13, 2025
100% மானியத்தில் பழச் செடிகள்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பப்பாளி, கொய்யா மற்றும் எழுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் உழவன் செயலில் பதிவு செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.