News October 15, 2025
நாகையில் 56,729 மெ.டன் நெல் கொள்முதல்

நாகையில் 2025-2026ம் ஆண்டு காரீப் குறுவை பருவத்தில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 56,729 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரையில் 36,852 மெ.டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 9,671 விவசாயிகளுக்கு ரூ.125.09 கோடி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
நாகை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், திருப்பூண்டி, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏதும் பதிவாகவில்லை.
News October 16, 2025
நாகை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு வரும் நவ.03-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு வரும் நவ.3-ம் தேதி மட்டும் ஒருநாள் உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவ.8 அன்று பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.