News September 15, 2025

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 235 மனுக்களை பெற்று, அவற்றிற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம் வழங்கினார்.

Similar News

News September 15, 2025

குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அன்பு கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமைத் துறை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார். உடன் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.

News September 15, 2025

ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் இஸ்திரி பெட்டி வழங்கிய கலெக்டர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.15) மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் பித்தளையால் ஆன இஸ்திரி பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவியையும் அவர் வழங்கினார்.

News September 15, 2025

மக்கள் நீதிமன்றத்தில் 1732 வழக்குகளுக்கு தீர்வு

image

நாகை மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் தலைமையில் பல்வேறு வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 1732 வழக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மதிப்பில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!