News April 13, 2025

நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

image

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News April 15, 2025

கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

image

நாகை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து இன்றைக்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

1252 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

நாகை அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் இன்று அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் 1252 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக ரூ.31 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!