News August 2, 2024

நாகையில் தேசிய கொடி பறக்குமா!!!

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்ததால் இறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. வரும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News

News December 22, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

நாகை: கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயிலானது செகந்தராபாத்திலிருந்து (ஐதராபாத்) நாளை (டிச.23) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு சென்னை, விழுப்புரம், காரைக்கால், நாகூா், நாகை வழியாக டிச.24 மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்கத்தில் வேளாங்கண்ணியிலிருந்து டிச.25 அன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு, அதே வழியில் டிச.26 காலை 6.10 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

நாகை: கோடி கணக்கில் போதை பொருள் கடத்தல்!

image

இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேளாங்கண்ணி பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ரவிச்சந்திரன் (40), ஆனந்தராஜ் (33), காஞ்சிநாதன் (31) ஆகியோரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ மெஸ்கலின் என்ற போதைப் பொருள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!