News August 9, 2025
நாகையில் துறைமுகம் மேம்படுத்துதல் குறித்த கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை துறைமுகம் சம்பந்தமான கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மேரி டேம் போர்டு சேர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில், தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நாகை துறைமுகத்தை 4 மீட்டர் ஆழப்படுத்தி, சாகர்மாலா திட்ட கீழ் சிறிய கப்பல் கையாள்வதற்கு குறித்தும் அலோசிக்கப்பட்டது.
Similar News
News August 10, 2025
நாகை: வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

நாகை பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
லைட்ஹவுஸ் பார்வை நேரம் மாற்றம்!

நாகை வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை லைட் ஹவுசில், தினமும் பார்வை பார்வை நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரையாக இருந்தது. இந்நிலையில், அந்த நேரம் மாற்றப்பட்டு தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் இனி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை விடுமுறை என லைட் ஹவுஸ் நிர்வாகி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
நாளை நிறைவு பெறும் புத்தக கண்காட்சி

நாகையில் கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சி நாளை ஆக.11ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் காலை மாலை இருவேளையும் புத்தக கண்காட்சியுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த விழா நிறைவை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழா பேருரை நிகழ்த்தி பரிசுகள் வழங்குகிறார்.