News December 26, 2025

நாகையில் சுனாமி நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய MP

image

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையில் சுனாமியில் உயிர்நீத்தவர்களின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று, கடலில் மலர் தூவியும் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News December 30, 2025

நாகை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்!

image

நாகை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 30, 2025

நாகை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 30, 2025

ரூ.3.75 லட்சம் உதவி: நாகை இளைஞர்களுக்கு வாய்ப்பு!

image

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!