News March 19, 2024

நாகையில் கடல் சேற்றில் சிக்கிய வயதான தம்பதி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்

Similar News

News November 1, 2025

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் சேவையில் மாற்றம்

image

முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி, வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் நவ.2 மற்றும் 4ஆம் தேதிகளில், தற்காலிகமாக முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 1, 2025

நாகை: வீடு தேடி வருகிறது – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான குடிமைப் பொருள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீட்டிற்கே சென்று நவ.3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

நாகை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு சிறை

image

திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.1500 லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதில், நவம்பர் 14ஆம் தேதி சிறையில் அடைக்க உத்தரவை தொடர்ந்து, திருச்சியில் உள்ள மகளிர் சிறைச்சாலையில் நேற்று அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!