News August 6, 2025
நாகையில் இலவச AC பழுது நீக்கும் பயிற்சி

நாகை IOB ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச AC & FRIDGE பழுதுநீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 6374005365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!
Similar News
News August 6, 2025
பொதுமக்களிடமிருந்து 14 மனுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(ஆக.6) மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், எஸ்பி சு. செல்வக்குமார் மக்களை சந்தித்து, அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 14மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
News August 6, 2025
நாகை: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
தாட்கோ சார்பில் சுகாதார உதவியாளர் பயிற்சி

நாகை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் டால்மியா பாரத் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகிட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்