News August 19, 2025
நாகையில் இலவச பயிற்சி; ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் பொன்னி சித்திரக் கடல் ஓவிய பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மயத்தில் இலவச ஓவிய பயிற்சியில் சேர நுழைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகிற ஆக.23ம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, 9003757531 என்ற எண்ணில் ஆக.22ம் தேதிக்குள் வாட்ஸ்அப்-யில் பதிவு செய்ய வேண்டும். மேலும் சந்தேகம் இருப்பின் அதே எண்ணுக்கு அழைக்கலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
நாகை: தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் வேலை

நாகை மக்களே.. வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 19, 2025
நாகை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகை நகராட்சி ஆணையர் லீனா சைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்கள், விளம்பர பேனர்கள் கட்டுமான பொருட்கள் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மீது சிமென்ட் பலகைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். மேலு, அவ்வாறு செய்யவில்லை என்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
நாகை: 4 நாட்களுக்கு பயணிகள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்காலில் இருந்து நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வரும் ஆகஸ்ட் 24, 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காரைக்கால் – திருவாருர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயிலானது திருவாரூரில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.