News August 9, 2024
நாகையில் இலங்கை மீனவர்கள் மீட்பு

இலங்கையை சேர்ந்த அகமது இர்பான் மற்றும் அஸ்டின் 20 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர்.படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர்.உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். அப்போது இந்திய – இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News August 9, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை அவுரி திடலில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். மேலும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.