News January 1, 2025
நாகையில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து ரத்து

காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் பயணிகள் செல்லும் வசதி, கட்டண சலுகை ஆகியவற்றுடன் நாளை 2 ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடல் தட்ப வெப்ப சூழ்நிலையால் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
நாகை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

நாகை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், நாகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஷேர்!
News December 24, 2025
நாகை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

நாகை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், நாகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <
News December 24, 2025
நாகை: இலவச எம்பிராய்டரி பயிற்சி அறிவிப்பு

நாகை புதிய கடற்கரை சாலை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் இலவச எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், ஆரி ஒர்க் ,பிளவுஸ் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பிற்கு மேல் படித்த 50 வயதுகுட்பட்டவர்கள் 6374005365 / 9047710810 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


