News October 21, 2025

நாகையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News February 3, 2026

எட்டுக்குடி முருகனுக்கு சிறப்பு பூஜை!

image

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் புகழ்பெற்ற எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, ஶ்ரீ முருக பெருமானுக்கு பால், தேன், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் மற்றும் தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News February 3, 2026

நாகை: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டமானது மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை, நாகூர், திருமருகல், திருப்பூண்டி, திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம், விழுந்தமாவடி, வாய்மேடு, கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2026

நாகை: ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள மாடக்கோவில்களான அம்பல்-பிரம்மபுரீஸ்வரர், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர், சிக்கல் நவநீதேஸ்வரர், வலிவலம் மனத்துணை நாதர், தேவூர் தேவபுரீஸ்வரர், கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில் ஆகியவற்றிற்கு ஒருநாள் மரபு சுற்றுலா பயணம் வரும் பிப்.22ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73958 89645 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!