News January 17, 2026
நாகூர்: கடல் அலையில் சிக்கி ஒருவர் பலி

வேலூரை சேர்ந்தவர் சிராஜ் அகமது (45). இவர் நேற்று குடும்பத்தோடு நாகூர் தர்காவுக்கு பிரார்த்தனைக்காக வந்துள்ளார். இதையடுத்து சிராஜ் அகமது தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சில்லடி கடற்கரைக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை ஒன்றில் சிராஜ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 26, 2026
நாகை: பூச்சி மருந்தை குடித்து தற்கொலை

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராமன். மது பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு, பல்வேறு உடல்நல கோளாறுகள் எழுந்துள்ளது. இதனால் விரகத்தியடைந்த ராமன் சம்பவத்தன்று, மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயனற்றுள்ளார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரணியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 26, 2026
நாகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

நாகை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
நாகை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <


