News March 16, 2025
நாகர்கோவில் வருகிறார் நடிகர் வடிவேலு!

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மார்ச் 19ஆம் தேதி வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் திரைப்பட நடிகர் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமையில் வருமான வரி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.*வடிவேலு ரசிகர்களுக்கு பகிரவும்*
Similar News
News March 16, 2025
குமரியில் வேலை வாய்ப்பு முகாம்!

வசந்த் அண்ட் கோ சார்பில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இளைஞர்கள் இதில் ஏராளமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என வசந்த் அண்ட் கோ தலைவர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 16, 2025
குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்த புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2025
“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் அறிவிப்பு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு மற்றும் நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைந்து பங்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.