News October 3, 2025
நாகர்கோவில்: மசாஜ் சென்டரில் விபசாரம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் விபசாரம் நடப்பது உறுதி செய்யபட்டு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்டனர். மசாஜ் சென்டர் மேலாளர் காந்தராஜா (24) கைது செய்யப்பட்டார். அவருக்குத் துணையாக இருந்த உடையார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டனர்.
Similar News
News October 3, 2025
குமரி: காரில் 810 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

குமரி, நித்திரவிளை போலீசார் நேற்று மாங்காடு பகுதியில் ரோந்து சென்ற போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 26 பிளாஸ்டிக் கேன்களில் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் 910 லிட்டர் இருந்தது. போலீசார் காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் ஜாண் பெஸ்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 3, 2025
குமரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..
News October 3, 2025
குமரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<