News November 11, 2024
நாகர்கோவில்: பைக்கில் சாகசம் செய்த மாணவருக்கு அபராதம்
குமரி மாவட்டம் நாகர்கோவில் சாலையில் HELMET அணியாமல், கல்லூரி பெண்கள் முன்பாக உயரக இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் பிடித்தனர். முடியை சீராக வெட்ட வைத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் அவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News November 19, 2024
கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று தாம்பரத்திலிருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
News November 19, 2024
குமரி கடலில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடக்கம்
இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆகியவை இணைந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக குமரி கடலில் நாளையும் நாளை மறுநாளும் (நவ.20,21) 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 42 கடற்கரை கிராமங்கள் கண்காணிக்கப்படுகிறது.
News November 19, 2024
சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள்
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் மூக்குக்கண்ணாடி உள்ளன.