News February 28, 2026
நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை

செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் (63). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட சாமிதாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News March 2, 2026
குமரி: அருமனை அருகே ஒருவர் தற்கொலை

அருமனை அருகே பள்ளிக்கோணம் கிராங்கோட்டு பகுதியை சேர்ந்தவர் மது (47). பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் 2 நாட்களாக அவரை காணவில்லை. உறவினர்கள் தேடிய நிலையில் நேற்று அவர் வீட்டின் பின்புறத்தில் மரத்தில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அருமனை போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.
News March 2, 2026
குமரி: குளச்சல் அருகே இளைஞர் தற்கொலை

பாலப்பள்ளம் அருகே கூந்தன் விளையை சேர்ந்தவர் அனில் குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காதால் ஊருக்கு திரும்பியவர் அவரது அண்ணனுடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய குளச்சல் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
குமரி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.


