News March 14, 2025

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் 

image

நாகர்கோவில் மாநகரில் மாநகர அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாரதி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் வடசேரி மீனாட்சிபுரம் பகுதிகளில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 126 கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 கடைகளுக்கு ரூ.22500 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News March 3, 2026

ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்

image

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதியான நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா கூறியுள்ளார்.

News March 3, 2026

குமரி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

குமரி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 3, 2026

குமரி: விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

image

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் இம்மானுவேல் (50). இவர் டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் பார்வதிபுரம் பகுதியில் களைக்கொல்லி விஷம் மருந்தை குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக, இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

error: Content is protected !!