News March 3, 2026
நாகர்கோவிலில் பா.ஜ.க.,வினர் மீது வழக்குப் பதிவு

நாகர்கோவிலை அடுத்துள்ள தம்மத்துக் கோணம் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் ராகுல்காந்தியின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக நாகர்கோவில் மேற்கு மாநகரத் தலைவர் சதீஷ் உட்பட சிலர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
குமரி : இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (மார்ச் 4) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 22.27 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 22.20 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 4.66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 4.75 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
News March 4, 2026
குமரி: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!

பளுகல் அருகே புன்னாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் டாளி (62). இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் டாளி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது டாளி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பளுகல் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


