News February 13, 2026
நாகர்கோவிலில் கார் ஏற்றி காண்ட்ராக்டர் கொலை

பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் விக்டர் ராஜ தாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கொடுத்த பணத்தை ஜெயக்குமாரும் அவரது சகோதரரும் காண்ட்ராக்டருமான விஜயகுமாரும் நேற்று இரவு கேட்ட போது விக்டர் ராஜாதாஸ் காரால் விஜயகுமாரை மோதினார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். இதனை கோட்டார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
குமரி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்..!

குமரி மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 16, 2026
குமரி: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், இங்கு <
News February 16, 2026
குமரி மாவட்டத்தில் 447 மண்டல அலுவலர்கள் நியமனம் – ஆட்சியர்

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 149 மண்டலங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு மண்டல அலுவலர், ஒரு உதவி மண்டல அலுவலர், ஒரு உதவியாளர் என மொத்தம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 149 மண்ட லத்திலும் 447 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பிறப்பித்துள்ளார்.


