News April 5, 2024
நாகர்கோவிலில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

பார்ட் டைம் எம்பி என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார். ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்.பி.யாக பணியாற்றினேன் அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்து எடுங்கள் என நாகர்கோவில் நடந்த இந்திய கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.
Similar News
News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
News April 10, 2025
கன்னியாகுமரி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
News April 10, 2025
குமரி கடலில் பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு – எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் அடிக்கடி எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.