News December 23, 2025
நாகர்கோவிலில் அதிர்ச்சி., 2017 வழக்குகள்!

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று (டிச.22) வடசேரியில் மினிபஸ் ஒன்றை சோதனையிட்டனர். அதில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் டிரைவர் பஸ்சை இயக்கியதால் அவருக்கு ரூ.12000 அபராதம் விதித்ததோடு அதிக ஒலியுடன் பாடல் ஒலிபரப்பட்டதால் கூடுதலாக ரூ500 அபராதம் விதித்தனர். டிசம்பரில் இதுவரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் மாநகரில் மட்டுமே 2017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
குமரி: போதையில் கீழே விழுந்து ஊழியர் பலி!

திருவனந்தபுரம் அருகே அருவிக்கரையைச் சேர்ந்தவர் புகாரி (52). இவர் தற்போது கல்லுக் கூட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். கோழிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் எற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
News December 28, 2025
குமரி: தொழிலாளி மீது இளைஞர்கள் தாக்குதல்!

குமரி மாவட்டம், கருங்கல் பகுதியை சோ்ந்தவா் டேவிட்ராஜ் (55). தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்த கிறிஸ்துராஜ் (25), சபா்ஜேம்ஸ் (23) ஆகிய இருவருக்கும் டேவிட்ராஜுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இளைஞர்கள் இருவரும் சேர்ந்து டேவிட்ராஜ்யை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இருவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
குமரி மக்களே ரூ.78,000 மானியம்., APPLY NOW!

குமரி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <


