News February 13, 2026

நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

image

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News February 18, 2026

நாகை மக்களே.. முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க.!

News February 18, 2026

நாகை: முன் விரோதத்தில் அரிவாளால் தாக்குதல்

image

திருக்குவளை அடுத்த பனங்காடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருக்கும் கச்ச நகரம் பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தமிழ்மாறனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொளப்பாடு பகுதியில் வந்த அரவிந்த் குமாரை தமிழ்மாறன் மற்றும் சஞ்சய் மாறன் உள்ளிட்ட 5 பேர் வழி மறித்து, அருவாளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் சஞ்சய் மாறனை கைது செய்தனர்.

News February 18, 2026

நாகை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

image

நாகை மாவட்டத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற பிப்.18 ஆம்ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாகை நகராட்சி, கீழ்வேளுர், மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!