News March 23, 2024
நாகப்பட்டினம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாகை மாவட்டம் சாமாந்தான்பேட்டையில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நாகப்பட்டினம்(தனி) மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
Similar News
News February 10, 2026
நாகை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமருகல் உடையான்தோப்பு தெருவை சேர்ந்த சுகந்தி (45) என்பவர் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தர கோரி, அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார், சுகந்தி மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News February 10, 2026
நாகை: 2 நாட்களுக்கு தண்ணீர் வராது!

கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகின்ற பிப்.12 மற்றும் பிப்.13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


