News November 12, 2024
நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் கைது

நாகையில் இருந்து அக்கரை பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகிலிருந்து 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
Similar News
News August 15, 2025
நாகையில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை பற்றி அலோசிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News August 14, 2025
நாகை மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு !

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் நாகை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW!
News August 14, 2025
நாகை மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை ஆக.15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 9.05 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைத்துள்ளார்.