News March 22, 2024
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலக பிரிவில் மக்களவைத் தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி பணியாளர்களை கணினி மூலம் பிரித்தெடுத்தலுக்கான (Randomization) முதல்கட்ட நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளார்.
Similar News
News October 26, 2025
நாகை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108098>>பாகம்-2<<>>)
News October 26, 2025
நாகை: ரூ.2.10 லட்சம் மானியம் பெற தகுதிகள் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News October 26, 2025
மாற்றத்திறனாளிகளுக்கான முகாம் மாற்றம்

நாகை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம், 2-வது செவ்வாய்க்கிழமை ஒரத்தூர் மருத்துவமனைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்பட்டு, இனி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 கட்டமாக நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


