News October 13, 2024
நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெயர் காரணம்

நாகை பண்டைய காலம்முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை ‘நாகர்’ என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் ‘சோழகுல வல்லிபட்டினம்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. பின்னர் காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது.
Similar News
News August 16, 2025
நாகை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! Apply Now

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <
News August 16, 2025
வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News August 16, 2025
நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <