News January 11, 2025
நாகப்பட்டினம்: பெயர் காரணம்

நாகப்பட்டினம் என்பது நகரிலிருந்து உருவானது. நகரி என்பது இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் இது பண்டைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
Similar News
News January 26, 2026
நாகை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <
News January 26, 2026
நாகை மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. நாகை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

நாகை மாவட்டத்தில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நெல் வயல்களில் 8 அடிக்கு 1 அடி பட்டம் பிரித்து விட வேண்டும். வயலில் உள்ள தண்ணீரை உடனடியாக வடிகட்டுதல், தேவைக்கு அதிகமாக யூரியா இடுவதை தவிர்த்தல், வேப்ப எண்ணெய் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை 1 லி தண்ணீருக்கு 3 மி.லி என்ற வீதத்தில் கலந்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


