News July 7, 2025
நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
News July 7, 2025
நாகையில் 227 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 227 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News July 7, 2025
நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை தத்து எடுப்பதோ வாங்குவதோ அல்லது விற்பதோ சட்டப்படி குற்றம் ஆகும். எனவே இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இளம் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் குற்றத்திற்கு உடந்தையாக இருப்போருக்கும் இதே தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.