News November 5, 2025
நவ.24-ல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 24 அல்லது 25-ம் தேதி தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ECI நடத்தும் SIR நடவடிக்கைகளை கடுமையாக சாடி வரும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்க வரிவிதிப்பும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News February 11, 2026
திமுக வேண்டாம்: புதிய காங்., மாவட்ட தலைவர்கள் முழக்கம்

திமுக-காங்., இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்., மாவட்ட தலைவர்களின் 90% பேர், DMK கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளார்களாம். தற்போதைய சூழலில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், கணிசமான தொகுதியில் போட்டியிடலாம், வாக்கு வங்கியும் அதிகரிக்கும் எனவும் கருத்தை பதிவு செய்துள்ளார்களாம்.
News February 11, 2026
விவேகானந்தரின் பொன்மொழிகள்

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம் *அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
News February 11, 2026
நேரடி அரசியலில் நுழைந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்த நிலையில் தற்போது நேரடியாக அரசியலில் களமிறங்கி இருக்கிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சபரீசன் பங்கேற்றுள்ளார். கட்சியினருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல் வேட்பாளர் தேர்விலும் சபரீசன் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.


