News November 10, 2025

நவம்பர் 10: வரலாற்றில் இன்று

image

*1910 – எழுத்தாளர் சாண்டில்யன் பிறந்தநாள். *1958 – நடிகர் ஆனந்தராஜ் பிறந்தநாள். *1975 – கவிஞர் தாமரை பிறந்தநாள். *1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது. *1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் PM நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. *2019 – இந்திய தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொண்ட முன்னாள் ஐஏஎஸ் டி.என்.சேஷன் காலமானார்.

Similar News

News March 10, 2026

இரவில் அனைவருக்கும் வந்தது.. உடனே செக் பண்ணுங்க

image

இந்தியாவின் சில நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம், போதுமான அளவு சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக BPCL, HPCL நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளன. எனினும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.

News March 10, 2026

பார்லிமென்ட் நடக்க ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா?

image

பார்லிமென்ட் அவை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹2.50 லட்சம் செலவாவதாக சபாநாயகர் (பொறுப்பு) ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி MP-க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவை நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு ₹9 கோடி செலவாகிறது. ஆனால், மக்கள் பணத்தை எதிர்க்கட்சி MP-க்கள் வீணடிப்பதாக சாடியுள்ளார்.

News March 10, 2026

ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

image

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.

error: Content is protected !!