News March 22, 2024
நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் இன்று(மார்ச் 22) இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக, இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காலை முதலே வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருகிறது.
Similar News
News November 3, 2025
நவ.06 தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வரும் 6ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும். தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற பிரதிநிதி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
சென்னை: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
சென்னை த.வெ.க அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை

கரூர் நெரிசல் தொடர்பான விசாரணைக்காக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜயின் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கரூரில் செப்.27ம் தேதி விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர் எனவே த.வெ.க முக்கிய நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் ஆர்ஜுனா. ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளது.


