News May 17, 2024
நள்ளிரவில் நேர்ந்த துயர சம்பவம்!

மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியம் (30) என்பவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு பெய்த மழையினால் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலசுப்ரமணியன் மீது கட்டிட சுவர் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி மதிச்சியம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை

மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்பாள் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை நாளை மறுநாள் (செப்.14) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
News September 12, 2025
மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 12, 2025
மதுரை: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..இது பண்ணுங்க

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (செப்.13) காலை 10 மணி முதல் பகல்1 மணி வரை சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம் நடக்கும். முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.