News January 9, 2026

நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. கூட்டணியில் முக்கிய மாற்றம்

image

OPS, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என EPS கூறியிருந்தாலும், TTV தினகரன் பற்றிய கேள்விக்கு, இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்றே தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் அமித்ஷாவை, TTV சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மீண்டும் NDA கூட்டணியில் அமமுக இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் NDA-வின் பலம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News January 23, 2026

BREAKING: இந்தியாவுக்கு 209 ரன்கள் டார்கெட்

image

2-வது டி20 ஆட்டத்தில் நியூசி., அணி இந்தியாவுக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. ரச்சின் ரவீந்திரா(44) மட்டும் சற்று நிலைத்து நின்று ஆடினார். இறுதியில் கேப்டன் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க 20 ஓவர் முடிவில் 208/6 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 wkts வீழ்த்தினார்.

News January 23, 2026

80 ஆண்டு உறவை முறித்துக் கொண்ட டிரம்ப்

image

உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) அமெரிக்கா வெளியேறியுள்ளது. 80 வருடங்களாக தொடர்ந்த இந்த பந்தம், இன்றுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்ததுள்ளது. கொரோனா தொற்று பரவலின்போது WHO சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டிய டிரம்ப், அதிலிருந்து விலக முடிவு செய்தார். WHO பட்ஜெட்டில் கிட்டத்தட்ட கால்வாசி பகுதியை நிதியாக US வழங்கிவந்த நிலையில், இது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News January 23, 2026

ரயில் லேட்டானால் ஃப்ரீ சாப்பாடு கிடைக்கும் தெரியுமா

image

இந்தியாவில் ரயில்கள் தாமதமாக ஓடுவது வழக்கமே. ஆனால், IRCTC விதிகளின் படி, ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு அல்லது சிற்றுண்டி வழங்கப்படும். இந்த வசதிகள் ராஜ்தானி, சதாப்தி & துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். காலையில் தாமதமானால் டீ, காபி & பிஸ்கட் வழங்கப்படும். மதியம் அல்லது இரவில் தாமதமானால் சாதம், பருப்பு & காய்கறிகள் உணவு வழங்கப்படும்.

error: Content is protected !!