News September 1, 2025
நல்ல தூக்கம் வேணுமா? பாயில் படுங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் *அமைதியான உறக்கம் ஏற்படும். *மூட்டு, தசை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். *உடலின் ரத்த ஓட்டம் சீராகும் *மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு, கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.
Similar News
News September 4, 2025
டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது

நபிகள் நாயகம் பிறந்த தினமான நாளை(செப்.5) மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக்(TASMAC) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் நாளை மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
உயர்கல்வியில் பின்தங்கும் தமிழகம்

நாட்டிலேயே உயர்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக(50%) உள்ளது தமிழகத்தில் தான் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால், நாட்டின் டாப் கல்வி நிலையங்கள் தரவரிசையில், முதல் 10 இடங்களில் ஒரே ஒரு நிறுவனம் தான் (மத்திய அரசு நடத்தும் சென்னை ஐஐடி) இடம்பெறுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களான அம்ரிதா(22), சவீதா (23) ஆகிய இடங்களில் இருக்க, அண்ணா பல்கலை (29-வது), சென்னை பல்கலை(68) பின்தங்கியுள்ளன. உங்க கருத்து?
News September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 2007 – 2009 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ₹1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011-ல் DVAC தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.