News February 7, 2026
நல்லா சாப்பிட்டாலும் குழந்தை ஒல்லியாவே இருக்கா?

குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடிவிட்டு கையை முறையாக கழுவாமல் உணவு சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் வயிற்றுக்குள் கிருமிகள் ஈஸியாக நுழைய வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகி அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடலில் ஒட்டாமல் போகலாம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். அல்லது தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வைக்கலாம். SHARE.
Similar News
News February 15, 2026
திமுக கூட்டணியில் 5 சீட்டு.. சற்றுமுன் அறிவிப்பு

2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வரும் தேர்தலில் மமக-வுக்கு 5 தொகுதிகளை(தனிச் சின்னம்) ஒதுக்க வேண்டும் என்றும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் இக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.
News February 15, 2026
இவர்களுக்கு ₹2,000 கிடைக்காது.. இதான் காரணம்

PM கிசான் திட்டத்தின் கீழ் 22-வது தவணைத்தொகை ₹2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை என்றாலோ, e-KYC-ஐ முழுமையாக முடிக்கவில்லை, Unique ID-ஐ பெறவில்லை என்றாலோ இந்த தொகை கிடைக்காமல் போகலாம். எனவே, வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆபிசில் நில ஆவணங்கள், சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை வழங்கி Unique ID பெறுங்கள்.
News February 15, 2026
இன்று இரு அணிகளும் கைகுலுக்குவார்களா?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து IND அணி வீரர்கள், PAK அணி வீரர்களுடன்<<17724089>> கை குலுக்குவதை<<>> தவிர்த்தனர். அது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இன்று T20I WC தொடரில், இவ்விரு அணிகளும் கைகுலுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு, டாஸ் போடும் போது பார்க்கலாம் என IND கேப்டன் SKY தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், PAK கேப்டன் சல்மான் அகாவும் போட்டியின் போது பார்க்கலாம் என கூறினார்.


