News February 26, 2026
நல்லகண்ணு உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி (PHOTOS)

எளிமையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். CM ஸ்டாலின், DCM உதயநிதி, OPS, EX அமைச்சர் ஜெயக்குமார், திருமாவளவன், அன்புமணி, விஜய், நயினார், GK வாசன், நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இரவில் அஞ்சலி செலுத்தினர். காலையில், வைகோ, பிரேமலதா, ரஜினி உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 1, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்தாலும், அவருக்கு ஆதரவாக இருந்த பலரும் எதிர் நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றனர். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். தற்போது, OPS-ன் உரிமை மீட்புக்குழு ஐடி பிரிவு தலைவராக இருந்த சுஜைனி மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். EPS முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். OPS ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவது பற்றி உங்க கருத்து?
News March 1, 2026
ஈரானை சனிக்கிழமை காலை தாக்கியது ஏன்?

ஈரானை எந்நேரமும் அமெரிக்கா தாக்கலாம் என தகவல் வெளியான நேரத்தில் சனிக்கிழமை காலை திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கமேனி முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவிருந்ததை அறிந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் கமேனி தலைமறைவாக திட்டமிட்டிருந்தது குறித்து இஸ்ரேல் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கமேனியை கொல்வதே இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்துள்ளது.
News March 1, 2026
நாளை தொடங்குகிறது அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


