News February 26, 2026

நல்லகண்ணுவை பின்பற்றும் அரசியல்வாதி யார்?

image

நல்லகண்ணு தன் பெயருக்கேற்றபடி வாழ்வில் நல்ல பார்வை கொண்டிருந்தவர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளா்களிடம் பேசிய அவர், நல்லகண்ணுவுக்கு மாலை போட்ட அரசியல்வாதிகளில் மிகச்சிலரை தவிர, அவரை பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். அத்துடன் வரும் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் ஓட்டுப்போடுவதே, நல்லகண்ணுவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என பேசியுள்ளார்.

Similar News

News March 1, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 1, 2026

மமகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக!

image

மனிதநேய மக்கள் கட்சி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் மமக போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். போட்டியிடும் 2 தொகுதிகள் எவை என்பது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலிலும் மமக 2 தொகுதிகளில் போட்டியிட்டது.

News March 1, 2026

ஈரான் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம்

image

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானின் அணுசக்தி விவகாரத்தை பயன்படுத்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இஸ்ரேலும், அமெரிக்காவும் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

error: Content is protected !!