News November 19, 2024
நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1,995/– மதிப்புடைய பிரெய்லி கைகடிகாரம், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500/– மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 7 பேருக்கு சலவைப் பெட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
Similar News
News November 19, 2024
280 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வங்கி கடன், மகளிர் உரிமைத் தொகை, சிறு தொழில் தொடங்க வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
News November 19, 2024
மகளிர் சுயஉதவிக்குழு கண்காட்சி: அமைச்சர் பார்வை
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், 71ஆவது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டு, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1,678 பயனாளிகளுக்கு ரூ.35.71 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.
News November 19, 2024
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19ஆ ம் முதல் 25ஆம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.19) மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்டவை இலவசமாக காணலாம்.