News June 10, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கற்பகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.8,61,420 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 15, 2025

பெரம்பலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17-ம் தேதிக்குள்ளாக விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 15, 2025

பெரம்பலூர்: நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செப்.16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், நாட்டார்மங்கலம், குரூர், செட்டிகுளம், ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…

News September 15, 2025

பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா வருகின்ற 20-09-2025 அன்று துரைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரத்திற்கு 04328-296352 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!