News December 30, 2025
நர்ஸ் பெண்ணை செங்கல்லால் தாக்கி மிரட்டியவர் கைது

சென்னை தி.நகர் வசிக்கும் 27 வயது பெண், 2020ல் திருமணமான பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து, தற்போது நர்ஸ் பணியில் உள்ளார். அவருடன் 4 ஆண்டுகளாக பழகி வந்த அன்பு, என்பவர் சில தினங்களாக பேசுவதை தவிர்த்ததால், பெண் 27.12.25 அன்று அப்பெண்ணை செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, அன்பு கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 31, 2025
சென்னையில் சிலிண்டர் புக் பண்ண ஒரு ‘Hi’ போதும்!

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
சென்னை: கார் மோதி பெண் பரிதாப பலி!

சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா (55). இவர் நேற்று அதிகாலை குப்பையை கொட்டுவதற்கு வெளியில் வந்த போது, அந்த பகுதியில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முகேஷ்குமார் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
சென்னையில் டூவீலர், கார் உள்ளதா?

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


