News December 30, 2025
நர்ஸ் பெண்ணை செங்கல்லால் தாக்கி மிரட்டியவர் கைது

சென்னை தி.நகர் வசிக்கும் 27 வயது பெண், 2020ல் திருமணமான பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து, தற்போது நர்ஸ் பணியில் உள்ளார். அவருடன் 4 ஆண்டுகளாக பழகி வந்த அன்பு, என்பவர் சில தினங்களாக பேசுவதை தவிர்த்ததால், பெண் 27.12.25 அன்று அப்பெண்ணை செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, அன்பு கைது செய்யப்பட்டார்.
Similar News
News January 6, 2026
புத்தக கண்காட்சிக்கு இலவச அனுமதி!

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 8ம் தேதி, பபாசி நடத்தும் 49வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வழக்கமாக பார்வையாளர்களிடம் ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
News January 6, 2026
சென்னை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

சென்னை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<
News January 6, 2026
BREAKING: சென்னையில் மழை வெளுக்கும்!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் சென்னையில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க.


