News February 27, 2025
நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்: காவலர் கைது

பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் இளம் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
News March 3, 2026
பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


