News April 13, 2025
நயினார்கோவில் நாகநாதர் கோயிலின் சிறப்பு

பரமக்குடி நயினார்கோவிலில் அமைந்துள்ளது நாகநாதர் கோயில். இங்கு மருதம், வில்வம் என 2 விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள் இந்த புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; இந்த புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.*ஷேர் பண்ணுங்க
Similar News
News April 15, 2025
மீனவர்களுக்கான இன்றைய (ஏப்.15) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.15) காற்றின் வேகம் 04 கிலோமீட்டர்/மணி முதல் 11 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
ராமநாதபுரத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பிரபல் நகை கடையில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை கூட்டாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு படித்த 21 வயது முதல் 35 உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். . இங்கு <
News April 15, 2025
கார் மோதி சாலையோரம் நின்ற சிறுவன்,சிறுமி பலி

சாயல்குடியை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா 13. அவரது உறவினர் மகன் ஹரி சூர்யா பிரகாஷ்.14 இருவரும் பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்ப கிழக்கு கடற்கரை சாலையோரம் ஒரமாக நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒர் கார் இருவர் மீதும் மோதியது சம்பவ இடத்தில் சண்முகப்பிரியா உயிரிழந்தார்.சிறுவன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.