News March 10, 2026
நயினாருடன் பனிப்போரா? பாஜகவில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு அந்த போட்டோக்களை X-ல் நயினார் பகிர்ந்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த கே.பி.ராமலிங்கம், ஆன்மிகத்தில் மட்டுமல்ல தொண்டர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் உண்டாகியுள்ளதா என SM-ல் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த KP ராமலிங்கம், தங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை என கூறியுள்ளார்.
Similar News
News March 30, 2026
தமிழக அரசுக்கு எதிராக போராடினோம்: பெ.சண்முகம்

ஊழலை ஒரு அளவீடாக கொண்டால், யாருடனுமே கூட்டணி சேர முடியாது என CPM-ன் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசுத் துறைகளில் அரங்கேறிய ஊழலுக்கு எதிராக CPM போராட்டம் நடத்தியிருக்கிறது என்றும், கூட்டணியில் இருப்பதாலேயே அவர்கள்(திமுக) செய்யும் ஊழலுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் கூறினார். மேலும், திமுக அரசுக்கு எதிராக CPM போராடிய விஷயங்களை வைத்து பல புத்தகங்களை போடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 30, 2026
இந்தியாவை நோக்கி வரும் 94,000 மெட்ரிக் டன் LPG

பெட்ரோல் பங்க்குகளில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 94,000 மெட்ரிக் டன் LPG உடன் 2 கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், மார்ச்சில் 2.9 லட்சம் கேஸ் இணைப்புகள் வீடு & வணிக பயன்பாடு உள்ளிட்டவைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News March 30, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை
▶குறள் எண்: 648
▶குறள்: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
▶பொருள்: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.


